• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்

அருண்ராஜா காமராஜ் இயக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருக்கும் உதயநிதி அடுத்தபடியாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.

இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்திற்கு ஏ .ஆர் .ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி திமுக இளைஞரணி தலைவராக உள்ளார் சினிமாவை குறைத்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதால் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது உதயநிதியின் விருப்பம் அதனால் இந்தப் படம் பிரம்மாண்டமான செலவில் குறுகிய நாட்களில் எடுத்துமுடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.