
கருங்கல் ஏ. பி. ஜே. எம் பள்ளியில் நடைபெற்ற கராத்தே போட்டி பரிசளிப்பு விழாவில் குமரி எம். பி விஜய் வசந்த் பங்கேற்றினார்.
கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் ஏ. பி. ஜே. எம் பள்ளியில் சன் ஷைன் புடோகான் கராத்தே டோஜோ சார்பில் தேசிய அளவிலான கே.கே.ஓபன் சாம்பியன்ஷிப் கராத்தே போட்டி நடைபெற்றது.
இந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிச வழங்கும் விழாவில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம். பி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை சான்றிதழ் வழங்கினார். இந்த கராத்தே போட்டியில் ஒவரால் சாம்பியன்ஷிப் மற்றும் பெஸ்ட் டீம் அணிகளுக்கான கோப்பையை விஜய்வசந்த் எம். பி வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரித்தாபுரம் பேருராட்சி துணைத்தலைவர் பிஜுமோன், அல்போன்சா கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆரோ, பள்ளி தாளாளர் ஆன்றனி ஜோஸ், ஏ. பி. ஜே பள்ளி முதல்வர் ரிஷி, செயின்ட் தெரசா கல்லூரி முதல்வர் டேவிட்ராஜபோஸ், உதவி தாளாளர் ஜோஸ்ன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

