• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பயத்தில் உறைய வைக்கும் கருநாகம்.. ஒன்று இல்லை மூன்று..

Byமதி

Nov 22, 2021

பாம்பு என்றால் படையும் நடுங்கும். அந்த வகையில் மகாராஷ்டிராவில் உள்ள காடு ஒன்றில் மூன்று நாகப்பாம்புகள் மரத்தில் சுற்றியிருக்கும் படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஐஎஃப்எஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த புகைப்படம், அமராவதி மாவட்டத்தில் உள்ள ஹரிசல் காட்டில் எடுக்கப்பட்டதாம். மூன்று நாகப்பாம்புகள் மரத்தை சுற்று வளைத்துக் படமெடுத்துக் கொண்டு நிற்கிறது..

இனச்சேர்க்கை காலத்தைத் தவிர 3 கரு நாகப்பாம்புகளை ஒன்றாகப் பார்ப்பது மிக அரிது. மற்ற பாம்புகளை பலமுறை பார்க்கலாம். ஆனால் இது தனித்தன்மை வாய்ந்தது. பாம்புகள், உறக்கநிலையிலிருந்து வெளியேறி, இனப்பெருக்கம் செய்கின்றன.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்கள் இதைப் பற்றி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.