விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவத்தை சூரிய ஒளி வெப்பத்தில் ஓவியமாக வரைந்து அசத்தினார்.
சிவகாசி ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கார்த்திக், மரப்பலகையில் சூரிய ஒளி வெப்பத்திலிருந்து லென்ஸ் மூலமாக ஓவியம் தீட்டுவதில் கைதேர்ந்தவர். பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது முக வடிவமைப்பை தனது கை வண்ணத்தில் சூரிய ஒளி ஓவியமாக வரைந்து தீட்டிய கார்த்திக், அந்த வீடியோ காட்சியை இணையதளத்தில் வைரலாக்கிவுள்ளார். வாலிபர் கார்த்திக் வரைந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் சூரிய ஒளி ஓவியம் பலரது பாராட்டு தலையும் பெற்றுள்ளது.





