• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கர்நாடகா ஹிஜாப் விவகாரம்.. தீர்ப்பு ஒத்திவைப்பு

கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்க்கும் மாணவிகளின் வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா அரசு பியூ கல்லூரிகயில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு குடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன.
இதற்கிடையே ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி கிருஷ்ண தீக்சித் விசாரித்தார். பிறகு மூவர் அமர்வுக்கு மாற்றினார். தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி அமர்வு வழக்கை பிப்ரவரி 10 முதல் விசாரிக்க துவங்கியது.

மாணவர்கள் மத அடையாள ஆடைகள் அணிந்து வகுப்புக்கு செல்ல ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பிறகு தினமும் தொடர்ச்சியா வழக்கு விசாரணை நடந்தது. மாணவிகள் தரப்பு வக்கீல்கள், அரசு தரப்பு வக்கீல்கள் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் கர்நாடக ஐகோர்டில் நேற்று 11வது நாளாக வழக்கு விசாரணை நடந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நவதகி நேற்று தனது தரப்பு வாதத்தை நிறைவு செய்தார். அதன்பிறகு மாணவிகள் தரப்பு வக்கீல்கள் கூடுதல் வாதங்களை முன்வைத்தனர். புதிதாக தாக்கலான மனு சார்பில் வக்கீல் வக்கீல் சுபாஷ் ஜா ஆஜராகி வாதாடினார். ”ஹிஜாப்புக்காக இவ்வளவு பெரிய கலவரம் நடைபெற சாத்தியமில்லை. இந்த வழக்கில் வாதாட நாடு முழுவதும் மூத்த வக்கீல்களை நியமித்துள்ளனர். சிலருக்கு நிதி உதவி வருகிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும்” என்றார்.

அதைத்தொடர்ந்து மனுதாரர்கள் சார்பில் மேலும் சில வக்கீல்கள் தங்களின் வாதத்தை எடுத்து வைக்க நீதிபதிகளிடம் அனுமதி கோரினர். அதற்கு தலைமை நீதிபதி, இந்த வழக்கில் நீங்கள் வாதிட விரும்பும் விஷயங்களை எழுத்து மூலமாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து தீர்பபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக நீதிபதிகள் கூறினர். இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு உடனடியாக வழங்கப்படும் என நினைத்த நிலையில் 11 விசாரணைக்கு பிறகும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் அடுத்தவாரம் தீர்ப்பு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.