விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கல்குறிச்சி முத்து நாடார் – கண்ணம்மாள் நினைவு அறக்கட்டளை, சாய்பாப பாராமெடிக்கல் கல்லூரி சார்பில் சுதந்திர தின விழா கல்குறிச்சியில் நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். கிராம தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார். கல்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் சுதந்திரதின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு எஸ்.பி.எம்.டிரஸ்ட் அழகர்சாமி பரிசுகள் வழங்கினார். கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம் மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட விவேகானந்தா கேந்திரா அமைப்பாளர் பேச்சியப்பன், அமலா லேப் டாக்டர். முனிஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

