• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காரைக்குடியில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்!

By

Sep 14, 2021
Sivagangai

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை பகுதியைச் சேர்ந்தவர் அயூப்கான். இவருக்கும் கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் ஏற்கனவே  இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணி அளவில் அயூப்பின் வீட்டிற்கு மூர்த்தி தனது நண்பர்களான இளையராஜா, தினகரன் சந்துரு ஆகியோருடன் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஆத்திரமடைந்த அயூப் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மூர்த்தியை வயிற்றில் குத்தியுள்ளார். பதிலுக்கு மூர்த்தி தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த இரும்பு ராடை கொண்டு தலையில் அடித்துள்ளார். ஒருவருக்கு ஒருவர் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர்.

இதில் மூர்த்தி வயிற்றில் குத்துபட்டும், அயூப் தலையில் அடிபட்டும், மேலும் ஒருவர் படுகாயங்களுடனும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில், இந்த மோதல் சம்பந்தமாக சந்துரு மற்றும் தினகரன் ஆகியோரை பிடித்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.