• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல்

புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைபெற்றது.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வாவத்துறையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கலை என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ்.ஜெஸீம், பேரூர் செயலாளர் எஸ்.எழிலன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனிரோஸ் தாமஸ், டெல்பின் ஜேக்கப், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் டி.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.