• Sat. Apr 27th, 2024

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கன்னியாகுமரி முக்கடல் கடற்பாறை திருவள்ளுவர் சிலையை காண சுற்றுலா பயணிகள் அனுமதி நேற்று முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடல் நடுவே சுற்றுலா பயணிகள் கடலில்,படகில் பயணித்து காணும் கலைக்கூடம் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் விண் முட்ட உயர்ந்த ஐயன் வான் புகழ் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.
திருவள்ளுவர் சிலைக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூச வேண்டும்.கடல் காற்றில் கலந்து வரும் உப்பின் தன்மையால் சிலை சிதிலம் அடையாமல் பாதுகாக்க. கடந்த ஆண்டு ஜீலை மாதம் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன பூச்சு பணிக்காக.தமிழக அரசு ரூ ஒருகோடி நிதி ஒதுக்கீடு செய்து. முதல் கட்டமாக சிலையை சுற்றி இரும்பு கம்பியால் ஆன சாரம் அமைக்கும் பணி தொடங்கியது. சாரம் அமைக்கும் பணிக்கே இரண்டு மாதங்கள் ஆனது. ரசாயன கலவை என்பது.சிலிக்கான் என்னும் ரசாயன திரவத்தோடு, காகித கூழ் கலவை உருவாக்கி அதனை சில நாட்கள் பெரிய, பெரிய டிரம்மில் ஊறவைத்து.அந்த காகித கூழ் கலவையை சிலை பகுதியில் முழுமையாக பூசி கிட்டத்தட்ட ஒரு மாதம் முழுமையாக உலர வைப்பார்கள். திருவள்ளுவர் சிலைக்கு முழுவதும் காகித கூழ் பூசி உலரும் காலத்தில்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பல நாட்கள் பெய்த கன மழையால்.சிலையில் பூசபபட்டிருந்த காகித கூழ் மழையில் நனைந்ததின் காரணமாக சிறு,சிறு சிதலங்களாக உலர்ந்தது.


கன மழை முழுவதும் நின்றபின். மீண்டும் ரசாயன கலவை பூச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதன் காரணமாக திருவள்ளுவர் சிலையை பணி முடிந்து சுற்றுலா பயணிகளை படகில் அனுப்புவது நீண்ட நாட்களுக்கு தடை பட்டது.
திருவள்ளுவர் சிலைப் பணி முடிந்ததும் ஒரு மாத கால தாமதமாக சரியாக 9_மாதங்களுக்கு பின் நேற்று (மார்ச்_6)ம் தேதி மாலை. அகஸ்தீஸ்வரம் தி மு க., ஒன்றிய செயலாளர் பாபு திருவள்ளுவர் சிலை பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந் நிகழ்ச்சிக்கு.கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி.ஸ்டீபன் தலைமையில்.சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பங்கேற்று மலர் தூவி மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.பணிக்காலம் முடிந்து முதல் படகு சுற்றுலா பயணிகளை சுமந்துகொண்டு.குமரி கடல் நடுவே உள்ள வான் தொடும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு அதன் முதல் பயணத்தை தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *