• Mon. May 20th, 2024

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் கோரிக்கை கடிதம்

மார்த்தாண்டம் பாலம்: உயர்மட்ட நிபுணர் குழு ஆய்விற்கு பின்னரே போக்குவரத்து அனுமதிக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மார்த்தாண்டம் பாலத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுப்புவதால் இந்த பாலத்தின் தரத்தை உயர்மட்ட நிபுணர் குழு பரிசோதித்து தர சான்றிதழ் வழங்கிய பின்னரே இதை முழு உபயோகத்திற்கு அரசு கொண்டு வர வேண்டும் என கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதை திறந்த போது மக்கள் மத்தியில் இந்த பாலத்தின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகள் எழுந்தது. நாளடைவில் பாலத்தின் மேல் போடப்பட்ட சாலையில் அடிக்கடி குண்டு குழிகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். ஒவ்வொரு முறையும் தேசிய நெடுஞ்சாலை துறை மேல் பூச்சு வேலைகள் மட்டும் செய்து வந்தது. இந்த சாலையை பராமரிக்காமல் நெடுஞ்சாலை துறை காலம் கடத்தி வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் பாலத்தின் பாதுகாப்பு குறித்து சந்தேகத்தை மக்களிடம் எழுப்பியுள்ளது.

இனிமேலும் இந்த பாலத்தில் சகஜமாக போக்குவரத்து என்பது மக்களின் உயிரை பணயம் வைப்பதாகும். தேசிய நெடுஞ்சாலை துறை உடனடியாக இந்த பாலத்தின் தரத்தையும், உறுதியையும் சோதிக்க ஒரு உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். அவர்களின் அறிக்கையை வைத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு ஆராய வேண்டும். இனி மேலும் மேல் பூச்சு வேலைகள் செய்யாமல் தரமாக செப்பனிட வேண்டும். அது வரையிலும் பாலத்தில் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது.
அது போல் இதே கால அளவில் கட்டப்பட்டு அடிக்கடி சேதமடையும் நாகர்கோவில் பார்வதிபுரம் பாலத்தினையும் நிபுணர் குழு மூலம் ஆராய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *