குமரி அம்மாண்டிவிளை அருகே வெள்ளிமலை பாலசுப்பிரமணியம் சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி கொடியேற்றம் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பங்கேற்றார்.
கந்த சஷ்டி திருவிழா திருக்கொடியேற்றம் மற்றும் கொடி மரம் கல்வெட்டு திறந்து வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. குமரி மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதீஸ்குமார், சுந்தரி, மராமத்து பொறியாளர் ஐயப்பன், ஸ்ரீகாரியம் ராஜசேகர், வெள்ளி மலை திமுக பேரூர் செயலாளர் ரங்கராஜா, கிளை செயலாளர் ரங்கநாதன், சுந்தர் லிங்கம், சிவக்குமார், சவுந்தர்ராஜன் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.
_