• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

குமுறும் குமரி மாவட்ட விவசாயிகள்!

By

Aug 26, 2021
Kanniyakumari

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் நெற்களஞ்சியமாக திகழ்ந்தால் குமரிக்கு நாஞ்சில் நாடு என்னும் மற்றொரு புகழ் பெயர் பெற்றது. இப்புகழ் பெற்ற குமரி மக்கள் தங்களுடைய வேதனையை வெளிப்படுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றினை முன் வைத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் இரண்டு வகை விவசாய காலம் உள்ளது. அவை கன்னிப்பூ,கும்பப்பூ காலங்கள். இப்போது நெல் அறுவடை காலம் என்பதால் கும்பப்பூ காலத்தை விட விளைச்சல் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் அரசின் நெல் கொள்முதல் கொள்கை வேறு விதமாக இருப்பதால்,
நாள் ஒன்றுக்கு ஒரு விவசாயிடமிருந்து 300 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்வதுடன் ஈரப்பதம் 17% மட்டுமே அனுமதிக்கப்படுவதால் விவசாயிகல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கன்னிப்பூ காலத்தில் விளையும் அனைத்து நெல்லையும் அரசே வாங்க வேண்டும் என்றும், 20% வரை ஈரப்பதத்திற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரசு கொள்முதல் செய்யாத பட்சத்தில் வியாபாரிகள் அடி மாட்டு விலைக்கு கேட்பதாகவும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.