மதுரையில் காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் சிறப்பு அபிஷேகம்- தீபாராதனை திரளான பக்தர்கள் தரிசனம் மதுரை அணுசக்தி நல கிரகம் அமைப்பு சார்பில் கஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அனுஷ உற்சவம்
மகா பெரியவா, உம்மாச்சி தாத்தா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் குமார்கிற முக்தி அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் திருநட்சத்திரமான அனுஷ உற்சவம் மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதனை முன்னிட்டு
மகாபெரியவா விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு திருமஞ்சனத்திரவியப் பொடி,. மஞ்சள் பொடி, பஞ்சகவ்யம், பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைப் பெற்றது. தொடர்ந்து ருத்ரா அபிஷேகம் நடைப்பெற்றது.
இந்நிகழ்வினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாட்டில் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
வேதாகம ரத்னா விருது
இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் குமார் ஷர்மா நாராயணன் சர்மா சுவாமிநாதன் ஷர்மா சபரி குரு சர்மா ஆகிய நான்கு வேத விற்பனர்களுக்கு நான்குவேத வேதாகம ரத்னா மற்றும் ஜோதிட கலாநிதி ஆகிய விருதினை முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வழங்கினார். நிகழ்வில் திருமங்கலம் ஹரீஸ் ஹோட்டல் அதிபர் ஈஸ்வரமூர்த்தி அதிமுக பிரமுகர் வெற்றிவேல் உட்பட பலர் பங்கேற்றனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் நடைபெற்ற காஞ்சி மகாபெரியவர் அனுசுவ உற்சவ விழாவில் வேத விற்பன்னர்கள் சந்தோஷ் சர்மா, நாராயணன் சர்மா, சுவாமிநாதன் சர்மா சபரி குரு சர்மா, ஆகியோருக்கு தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேதாகம ரத்னா மற்றும் ஜோதிட கலாநிதி விருதுகளை வழங்கிய போது எடுத்த படம் அருகில் இடமிருந்து வேத விற்பன்னர்கள் மற்றும் நெல்லை பாலு,எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் உள்ளனர்.