அயோத்தி பிரச்சனைக்கு முழு தீர்வு வருவதற்கு மூல காரணமாக இருந்தவர் முக்தி அடைந்த காஞ்சி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.
ஜெயந்திரர் ஆராதனை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் முக்தி அடைந்த காஞ்சி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை விழா மதுரை எஸ் எஸ் காலனி பொன்மேனி நாராயணன் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் நடைபெற்றது. அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவன நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது .
சமூகத்தில் தாழ்ந்த மக்களின் சேரி பகுதிகளுக்கு சென்று கோவில் கும்பாபிஷேகங்கள் பலவற்றை நடத்தியவர் ஸ்ரீ ஜெயந்திரர். வேத பாடசாலைகளுக்கு உதவி செய்தது போல தேவாரம் திருவாசகம் ஓதுவார்களுக்கும் அவ்வப்போது தங்க காசுகள் வழங்கி ஊக்குவித்தவர். அனைத்து மதங்களையும் இணைத்து பல நிகழ்வுகளை நடத்தியவர். ஜெகத்குரு என்ற வார்த்தைக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். அயோத்தி ராமர் கோவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மூல காரணமாக இருந்து அதற்காக பாடுபட்டவர் ஸ்ரீ ஜெயந்திரர். சோதனைகளை தன் தவ வலிமையால் வென்றவர். சனாதன தர்மத்தின் அச்சாணி நமது குருமார்கள். தர்மம் தாழ்ந்து அதர்மம் தழைக்கும் பொழுது குருவாக இறைவன் அவதாரம் செய்திருக்கிறார். ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு சமயப் பணியாற்றியவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். ஜனக்கல்யான் என்ற அமைப்பு தோற்றுவித்து ஏழைகளுக்காக பாடுபட்டவர். இவ்வாறு அர்ஜுன் சம்பத் பேசினார் விழாவில் மதுரை எஸ் எஸ் காலனி சத்சங்கம் நிர்வாகிகள் ராமச்சந்திரன் சந்திரசேகரன் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி காண ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்…