செல்லம்பட்டி ஒன்றியம் கு நாட்டாபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜரின் 122 வது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது பள்ளியில் ஊர் முதன்மைக்காரர் வேலுச்சாமி தலைமை தாங்கவும், தலைமையாசிரியர் சின்னசாமி முன்னிலை வகிக்கவும், காமராஜர் நல சங்கத்தின் தலைவர் தர்மர் வரவேற்புரையாற்றவும், சிறப்பு விருந்தினர்களாக T V பாண்டியன் கனகராஜ் செந்தில் மணவாளக்கண்ணன் சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர பாண்டி ஆகியோர் கலந்து கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியர் பசும்பொன் இளங்கோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி நன்றியுரை கூறினார்
நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக காமராஜர் நல சங்கத்தின் மூலம் 15000 ரூபாய் மதிப்புள்ள பெடஸ்டல் ஃபேன் இரண்டு மின்விசிறிகள் அன்பளிப்பு அளிக்கப்பட்டன. அருண்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார். காமராஜர் நற்பணி உறுப்பினர்கள் தர்மர், மலை ராஜன், அருண் D. சுரேஷ், M ராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.