காமராஜர் பிறந்த தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, காமராஜர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் வரும் ஜூலை 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லம் அருகில் கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலை சுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணி தொடங்கியது. பராமரிப்பு பணியினை விழா குழு கமிட்டியினர் பார்வையிட்டனர்.