நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள அச்சம்பத்து மகிழ்ச்சி இளம் மழலையர் பள்ளியில், பள்ளி நிர்வாகத்தின் சார்பாக காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செல்வி பிரீத்தி ஜெனிபர் வரவேற்றார். பள்ளி நிறுவனர் சார்லஸ் ராஜ்குமார் தலைமை வகித்தார். தாளாளர் நித்யா தேவி, கெவின் குமார் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் ஆண்டனி மைக்கேல் விஜயன், கலந்து கொண்டு மழலையர்களுக்கு இனிப்பு வழங்கினார். முடிவில், அக்ஷிதா நன்றி கூறினார். சிறப்பு விருந்தினர்க்கு புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை, ஜெயலட்சுமி, சுபா ஆகியோர் செய்திருந்தனர்.
மதுரை அருகே காமராஜர் பிறந்த நாள் விழா..!
