• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கமல்ஹாசன் – லிங்குசாமி கூட்டணியில் புதிய படம்?

தமிழ் சினிமாவில்குறுகிய காலத்தில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி,
சிவகார்த்திகேயன்,நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்த படங்களை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் சிவாஜி கணேசன் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை நடிகரான விக்ரம்பிரபு அறிமுகமான கும்கி படத்தையும் தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது
ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து வெளியான தீபாவளி படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமான திருப்பதி பிரதர்ஸ் கார்த்தி நடிப்பில் பையா, கோலிசோடா, விக்ரம்பிரபு அறிமுகமானகும்கி, வழக்கு எண்18/9, ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை, நட்டி நட்ராஜ் சதுரங்கவேட்டை, வேட்டை, சூர்யா நடித்த அஞ்சான் என குறிப்பிடத்தக்க படங்களை தயாரித்தது.

சிவகார்த்திகேயன் திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி அவர் அடுத்தடுத்து நடித்த படங்களின் வியாபார மதிப்பு அதிகரிக்க காரணமான ரஜினிமுருகன் படத்தை தயரித்த நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் கமல்ஹாசன் நாயகனாக நடித்த உத்தமவில்லன் படத்தை தயாரித்ததன் மூலம் மிகப்பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்கொண்டது திருப்பதி பிரதர்ஸ் கமல்ஹாசன் பரமரசிகரான லிங்குசாமி அவர் நடிக்கும் பக்கா கமர்சியல் படத்தை தயாரிக்க விரும்பினார் ஆனால் கமல்ஹாசன் புதிய முயற்சியாக உத்தமவில்லன் படத்தின் கதையை கூறி தயாரியுங்கள் என கூறலிங்குசாமியால் மறுக்க முடியவில்லை முதல் பிரதி அடிப்படையில் ராஜ்கமல் இண்டர்நேஷனல்- திருப்பதி பிரதர்ஸ் உடன் இணைந்து உத்தமவில்லன் படம் தயாரிக்கப்பட்டது.லிங்குசாமி ஒப்புதல் பெறாமலே படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை கமல்ஹாசன் விற்பனை செய்து விட்டார் என பட வெளியீட்டின்போது பிரச்சினை உருவானது கமல்ஹாசன் விருப்பபட்ட கதையை எடுப்பதால் நஷ்டம் ஏற்பட்டால் அடுத்து ஒரு படம் தயாரிக்க கால்ஷீட் தருவதாக அவர் கொடுத்த உறுதிமொழிப்படி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கமல்ஹாசன் எழுத்து மூலமாக பட வெளியீட்டின்போது கடிதம் கொடுத்தார் மீண்டும் திருப்பதி பிரதர்ஸ் பட தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளது. ஏற்கனவே கமல் கொடுத்த வாக்குறுதிப்படி தங்கள் நிறுவன தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இயக்குநர் லிங்குசாமி பேசியிருந்தார். இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தி இது சம்பந்தமான விவாதம் எழுந்துள்ளது அடுத்தடுத்து புதிய படங்களில் நடிப்பதிலும், பிற நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்திவரும் கமல்ஹாசன் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நடிப்பது சாத்தியமா என சினிமா வட்டாரங்களில் விசாரித்தபோது உத்தமவில்லன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது கமல்ஹாசன் ஒப்புக் கொண்டது தான் அதனை கடிதமாகவும் கொடுத்திருக்கிறார்.
அதனால் அவர் நடித்து கொடுப்பபார் என்றதுடன் அதற்கான பூர்வாங்க பேச்சு வார்த்தைகள் லிங்குசாமி தரப்பில் தொடங்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வர கூடும் சினிமாவை நேசிக்கும் கமல்ஹாசனும் – லிங்குசாமியும் அதற்காக நிறைய இழப்புக்களை எதிர் கொண்டவர்கள் அதனால் இருவரது கூட்டணியில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படம் தயாரிப்பார்கள் என்றனர்.