• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கமல்ஹாசன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தார்.

அவரை தொடர்ந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில், கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக தொடர்ந்தார். அதேநேரத்தில் பல்வேறு படங்களில் நடிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் கமல்ஹாசன் வழக்கமான பணிக்கு திரும்பிவிட்டார் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்நிலையில், கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காகவே கமல்ஹாசன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மாலைக்குள் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.