• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கமல் உடல் நலம் தோறியுள்ளது-மகள் ஸ்ருதிஹாசன் நன்றி

Byகாயத்ரி

Nov 25, 2021

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது, உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கமலின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமாக உள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கமல் உடல் நலம் பெற, அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோவில் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் கூறுகையில், என் தந்தையின் ஆரோக்கியத்திற்காக செய்யப்படும் பிரார்த்தனைக்கு நன்றி. அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில், உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக உள்ளார், என்றார்