• Fri. Apr 18th, 2025

ஒரே நாளில் ரூ.200 கோடி வசூல் வேட்டையில் கல்கி 2898 ஏடி

Byவிஷா

Jun 29, 2024

நடிகர் பிரபாஸ் நடித்து வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் ஒரே நாளில் ரூ.200 கோடியை வசூல் பண்ணியுள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் பிரபாஸ். இவர், நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தான் ‘கல்கி 2898 ஏடி’. பிரபாஸ{டன் உலகநாயகன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இதனால், இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.
நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நேற்று (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் பெரிதும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில், ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் முதல்நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.95 கோடி வசூலித்துள்ளதாகவும், உலக அளவில் ரூ.180 கோடி வசூலித்ததாகவும் ஆங்கில ஊடகங்கள் தகவல் தெரிவித்த நிலையில், படக்குழு ரூ.191.5 கோடி வசூலித்ததாக போஸ்டரை வெளியிட்டுள்ளது.