• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,

ByP.Thangapandi

May 28, 2025

உசிலம்பட்டி அருகே நல்லம்மாபட்டியில் வேப்பமரத்தில் வீற்றிருந்த காளியம்மனுக்கு 70 ஆண்டுகளுக்கு பின் 71 அடி உயரத்தில் கோபுரத்துடன், கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லம்மாபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த காளியம்மன் கோவில். வேப்ப மரத்தில் வீற்றிருந்த காளியம்மனுக்கு 70 ஆண்டுகளுக்கு பின் அர்த்த மண்டபம், 71 அடி உயரத்தில் கோபுரம் அமைக்கப்பட்டு கிராம மக்கள் சார்பில் கோவில் எழுப்பபட்டுள்ளது.,

இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது., முன்னதாக நேற்றைய முன் தினம் கணபதி ஹோமத்துடன் சாலை பூஜைகள் துவங்கி, ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற்று இன்று பூர்ணாவதி யாகம் முடிவடைந்த பின் கடம் புறப்பாடாகி கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

பின்னர் மூல ஸ்தானத்தில் அமைந்துள்ள காளியம்மனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, பால், பன்னீர், சந்தன அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் காட்சியளித்தார்.

உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், தொட்டப்பநாயக்கணூர் ஜமின்தார் பாண்டியன், திமுக ஒன்றிய செயலாளர் பழனி, தவெக மாவட்ட செயலாளர் விஜய் உள்ளிட்ட ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.