• Mon. Apr 29th, 2024

சோழவந்தான் அருகே காளியம்மன் கோவில் திருவிழா

ByN.Ravi

Mar 27, 2024

சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொம்மன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த வாரம் திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் சக்தி கிரகம் எடுத்து வந்தனர். இத்துடன் சாமி பெட்டியும் சாமி ஆடிகளும் அழைத்து வந்தனர். வான வேடிக்கைகள் கலை நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. 2ம் நாள் அதிகாலை நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்து கோவில் முன்பாக முளைப்பாரிகளை வைத்து பெண்கள் கிராமத்து பாணியில் முளைப்பாரி பாடல் பாடி.கும்மி அடித்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் பால்குடம்,அக்னிசட்டி எடுத்து வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினார்கள். அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 3ம் நாள் காலை முளைப்பாரி மற்றும் சக்திகரகம் கரைத்தல் நடந்து மஞ்சள் நீராட்டுதல் நடந்தது. சோழவந்தான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சின்னன், ஏட்டு ராஜா உட்பட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். விழா குழுவினர், திருவிழா கமிட்டியினர் மற்றும் கிராம பொதுமக்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *