• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கலசலிங்கம் விஷூவல் கம்யூனிகேஷன் மாணவர்களின் குறும்படங்கள் வெளியீட்டு விழா

ByI.Sekar

May 4, 2024

கலசலிங்கம் விஷூவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் இயக்கிய குறும்படங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், பல்கலைக்கழக வேந்தர் முனைவர். கே.ஸ்ரீதரன் அவர்கள் தலைமை வகித்து குறும்படங்களை வெளியிட்டார். துணைவேந்தர் முனைவர். எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வாசுதேவன், வைஸ் பிரசிடண்ட் முனைவர். எஸ். சசி ஆனந்த், டீன் முனைவர். வி. பாண்டியராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்வில் திரைப்பட இயக்குனர் கஜேந்திரன், தேனி மாவட்ட பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் ஜான் தவமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்குக் கொண்டனர். இந்த நிகழ்வில் விஷூவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் இயக்கிய “பொமெடோரோ”, ” கில்லர்”,”கீமேன்”,”ட்ரேன்ஸ்”,”ரிகிரட்” ஆகிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டன. மாணவர்களின் குறும்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை துறைத்தலைவர், முனைவர். க.கற்பக சுந்தரம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.