திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் கோளறு பதிகம் நவகிரக கோட்டை ஆவணி ஒன்று சனி பிரதோஷமான இன்று நந்தி பகவானுக்கு அனைத்து வகையான சிறப்பு அபிஷேகம் செய்து பூஜை சிறப்பாக நடைபெற்றது.
மேலும் கோவை காமாட்சி ஆதீனம் 51 சத்தி இடம் நவகிரக கோட்டையில் எழுந்திருக்கும் சிவலிங்கத்துக்கு சிறப்பாக அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.
