• Sun. Oct 6th, 2024

கலைஞர் நினைவு நூலகம் அடுத்தாண்டு ஜனவரிக்குள் கட்டி முடிக்கப்படும் – அமைச்சர் எ.வ.வேலு

Byகுமார்

Mar 25, 2022

கலைஞர் நினைவு நூலகம் அடுத்தாண்டு ஜனவரிக்குள் கட்டி முடிக்கப்படும் எனவும், திமுக ஆட்சியில் சாலை விபத்துக்கள் 15% குறைந்துள்ளன என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மதுரை புது நத்தம் சாலையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டிடப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, ஊரக துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டியின்போது, ‘கலைஞர் நினைவு நூலக கட்டுமானம் விரைவாகவும், தரமாகவும் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானத்தின் தரம், தொழிலாளர் பாதுகாப்பு, அதிகாரிகள் கண்காணிப்பு ஆகிய பணிகள் அனைத்தும் சரியாக நடைபெற்று வருகின்றன. கீழ் தளம், தரை தளம், முதல் தளம் ஆகிய தள பணிகள் முடிவடைந்து உள்ளன. இந்த வளாகத்தில் கலைஞரின் சிலையும் அமைக்கப்பட உள்ளது. 31.1.2023 ஜனவரிக்குள் நூலகத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பழனி – கொடைக்கானல் – மூணாறு சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் அக்கற்றப்பட வேண்டிய சுங்க சாவடிகளின் விபரங்களை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம், அது வந்தவுடன் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும். கடந்த ஆட்சி காலத்தை விட, திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 15% விபத்துக்கள் குறைந்து உள்ளதாக நாடாளுமன்ற அவையில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். விபத்திற்குள்ளான மதுரை புது நத்தம் மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க தேசிய நெடுஞ்சாலை துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *