• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வெளியானது காஜல் குழந்தையின் முதல் புகைப்படம்…

Byகாயத்ரி

Apr 20, 2022

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். எப்போதும் அழகான சிரிப்பு முகத்துடன் இருக்கக் கூடியவர்.இவர் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். திருமண புகைப்படங்களும் அப்போதே வெளியாகி செம வைரலானது.திருமணத்திற்கு பின் சொந்த தொழிலை கவனிப்பது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருந்த காஜல் இடையில் சிரஞ்சீவியுடன் நடிக்க கமிட்டான படத்திலும் நடித்து முடித்தார். பின் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளியே வர ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தனர். கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் நடிகை காஜல் அகர்வால் நிறைய போட்டோ ஷுட் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 19 நடிகை காஜல்-கௌதமிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது அந்த குழந்தையின் புகைப்படம் முதன்முறையாக வெளியாகியுள்ளது.அந்த புகைப்படத்தில் காஜல் தன் குழந்தைக்கு முத்தமிட்டுள்ளார்.