• Mon. Feb 16th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு போட்டிகளுக்கு நிதி வழங்கிய கே. டி. ராஜேந்திரபாலாஜி..,

ByK Kaliraj

Apr 26, 2025

சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்காக நடைபெறும் கபடி போட்டி, கிரிக்கெட் போட்டி, வாலிபால், உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி நிதி உதவி வழங்கி வருகிறார்.

திருத்தங்கல் சோனி கல்குவாரி மைதானத்தில் எம்.சி.சி. கிரிக்கெட் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி 32 அணிகள் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிக்கு ஊக்குவிப்பதற்காக ரூபாய் 25,000 நன்கொடை கொடுத்து போட்டியினை சிறப்பாக நடத்துமாறு கிரிக்கெட் கிளப் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.