விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள காமராஜர் யூத் பவுண்டேஷன் சார்பில் பத்தாம் ஆண்டு திறமைத் திருவிழா வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

அதற்கான சிறப்பு அழைப்பிதழை அதிமுக கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களிடம் விழா அழைப்பிதழை காமராஜ் யூத் பவுண்டேஷன் நிறுவனர்
அர்ஜுன் சாம், செயலாளர் சிவகுமார், துணை செயலாளர் கார்த்திகேயன், துணைத்தலைவர் நரேந்திரன் மற்றும் காமராஜ் யூத் பவுண்டேஷன் நிர்வாகிகள் வழங்கினார்கள்.

அவசியம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி உறுதி அளித்தார். அதற்கு நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்