விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்களில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து கலந்துரையாடினர்.

பின்பு கே.டி.ராஜேந்திரபாலாஜி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டியும், அதிமுக ஆட்சி அமைக்கவும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வேண்டியும்
பிராத்தனை செய்தனர் . இந்நிகழ்வின் போது முன்னாள் வாரிய தலைவரும், கழக சிறுபான்மை பிரிவு பொருளாளருமான ஜான்மகேந்திரன் உடன் இருந்தார்.










