விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்ட நிலையில் அவருக்கு கோயில் நிர்வாகம் மட்டும் கிராம மக்கள் சார்பாக சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு கோயிலில் ராஜேந்திரபாலாஜி சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.


1000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள அக்கால மக்கள் வணங்கிய நந்தி சிலை இன்றும் அப்படியே பழமை மாறாமல் இருப்பது அங்கு கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது .இந்த கோயிலில் உள்ள நந்தி சிலையை ஈஞ்சார் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வணங்கி சென்றனர். இந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




