விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள செல்வ கணபதி, பூ மாரியம்மன் கோவில், வளாகத்தில் பைரவர், முனீஸ்வரன், சன்னதியில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக ஏராளமான மாலை அணிந்த பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து விமான கலசத்திற்கும் பரிவார மூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் கே .டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு சிறப்பித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.