விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முள்ளிக்குளம் கிராமத்தில் வரும் ஆறாம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு முள்ளிக்குளம் கிரிக்கெட் கிளப் மற்றும் முள்ளிகுளம் ஊர் பொதுமக்கள் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

அந்த நிகழ்ச்சியினை தொடங்கி வைக்க வருகை தருமாறு நிர்வாக கமிட்டியினர் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜியிடம் நேரில் அழைப்பிதழ் கொடுத்தனர்.
அதனை ஏற்று விழாவில் கலந்து கொள்வதாக உறுதி அளித்தார். மேலும் கிரிக்கெட் போட்டி சிறப்பாக நடைபெற ரூபாய் 25,000 நன்கொடை வழங்கினார். நன்கொடை வழங்கியதற்கு நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.