

எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் அன்னதானத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி
தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை சொந்தமான அனைத்து கோவில்களிலும் அன்னதானத்தை தொடங்கி வைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவர்களின் வழியில் ஆட்சி செய்த கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடியார் இல்லாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அதிமுக ஆட்சி தான் வேண்டுமென மக்கள் உணர தொடங்கிவிட்டனர். பொய்யான வாக்குறதிவழங்கி ஏமாற்றிய திமுகவை தோற்கடிக்க மக்கள் தயாராகி விட்டனர். ஏழைகளுக்கு உதவக்கூடிய சின்னம் இரட்டை இலை என்பதை மக்கள் வரும் தேர்தலில் நிருபிப்பார்கள்.
ஜாதி மதம் பார்க்காத எடப்பாடியார் முதல்வராக பொறுப்பேற்பார் என அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசினார்.
நிகழ்ச்சியில் சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் லட்சுமி நாராயணன் ,பாலாஜி, உட்பட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

