“அண்ணே சாப்பிட என்ன இருக்கு.., சாப்பிட புராட்டா மட்டும்தான் இருக்கு. அதுவும் செட்டா தான் கொடுப்போம். சிங்கிள் பீஸல்லாம் கொடுக்கமாட்டோம்” என்று கடைக்காரர் கர்ரராக சொல்ல, வேற வழியே இல்லாமல் சேகர்-சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாடிக்கையாளர் சரி கொடுங்க.., ரெண்டு செட் பரோட்டா சாப்பிட ஆரம்பிக்கும் போதே கையில் பாத்திரம் விளக்கும் சணல் கம்பி தென்பட, இன்னைக்கு நம்ம சாப்பிட்ட மாதிரிதான். உடனே கடுப்பாகி போன வாடிக்கையாளர் சேகர் சாந்தி நாங்களே கடுமையான பசியில வந்திருக்கோம். என்னணே ஹோட்டல் நிர்வாகம் பாக்கிறீங்க. பரோட்டாவில சணல் கம்பி கிடக்கு. “இத சாப்பிட்டு எங்க குடல் கிழிய, ஆஸ்பத்திரில போய் அட்மிட் ஆக” என்று ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்க, “வீரபாண்டி திருவிழா நேரம் கொஞ்சம் அனுசரிச்சு தான் போங்களேன்” என்று கூற, கடுப்பாகி போன சேகரும், சாந்தியும் ஹோட்டல் உரிமையாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதை கண்ட அருகில் இருந்த வாடிக்கையாளர்கள் ஹோட்டல் உரிமையாளரை சத்தமிட பரபரப்பான சுழல் நிலவியது.


அம்மன் ரிலாக்ஸ் ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு


நேற்று நமது அரசியல் டுடேவில் வெளியான செய்தி
இதைப்பற்றி மிக விரிவாக நேற்று (11.05.2024) செய்தியாக நமது அரசியல்டுடே.காம்-மில் பதிவிட்டு இருந்தோம். இதைக்கண்ட தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் ராகவனை தொடர்பு கொண்ட உடனே தேனி உப்பார்பட்டி விளக்கில் உள்ள அம்மன் ரிலாக்ஸ் கடையை ஆய்வு செய்யுங்கள் என உத்தரவிட தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அனைவரும் பரோட்டாவில கம்பியை போட்டா பிசைஞ்சு கொடுப்பீங்க உங்களுக்கு அறிவே இல்லையா இத சாப்பிட்டு வாடிக்கையாளர் செத்துப்போன தேனி மாவட்டத்துக்குதான்யா கெட்ட பெயரு என்று கூறிக்கொண்டே கடையை சோதனையிட்டனர். பின்னர் அவதாரமும் விதித்திருக்கின்றனர்.

ராகவன்
இது பற்றி மேலும் விவரம் அறிய தேனி மாவட்டம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ராகவனிடம் பேசினோம்.., வாடிக்கையாளர்களிடம் அஜராக்தையாக நடந்து கொண்ட தேனி உப்பார்பட்டி அருகே உள்ள அம்மன் ரிலாக்ஸ் கடை மீது உணவு பாதுகாப்பு மற்றம் தரங்கள் சட்டம் 2006 பிரிவு 58-ன் படி ரூபாய் அபராதமாக விதிக்க்ப்பட்டுள்ளது. மேலும் கடை உரிமையாளர் முத்துபாலாஜி-யிடம் மேலும், இப்படிப்பட்ட தவறு நடந்தால் உணவு பாதுகாப்புத்துறையின் அதிகபட்ச தண்டணையாக கடைக்கு சீல் வைக்கப்பட்டு பூட்டப்படும் என எச்சரிக்கைப்பட்டுள்ளது என்றார் பொறுப்பாக.
எது எப்படியோ ஹோட்டல் நடத்துபவர்கள் அக்கறையாக பார்த்துக்கொணடால் இது மாதிரி சம்பவங்கள தவிர்க்கப்படலாம்.

