கரூர், திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தை வருகின்ற 6.10.25 முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து இன்று மாலை 6.00 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சுதா செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

மாலை 6 மணிக்கே செய்தியாளர்கள் அவரின் அலுவலகத்திற்க்கு வந்து 1 மணி நேரம் காத்திருந்தனர். இதனால் பொறுமை இழந்த செய்தியாளர்கள் செய்தியாளர் சந்திப்பை புறக்கணிக்க முடிவு செய்து அனைவரும் அங்கு இருந்து வெளியேற முயன்றனர்.

உடனே அங்கு வந்த ஆணையர் சுதா , வேறு ஒரு கூட்டத்தில் உள்ளேன். சிறிது நேரம் ஆகும் என்றார். இதனால் பொறுமை இழந்த செய்தியாளர்கள் வெளியே செல்ல முயன்றனர் அப்போது ஆணையர் நாளை செய்தியாளர் சந்திப்பு வைத்துக் கொள்ளலாமா என்று கூறியதும் ஒரு மணி நேரமாக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் நாளை வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர் அப்போது செய்தியாளர்கள் வீடியோ எடுப்பதை கவனித்த ஆணையர் அங்கிருந்து அவசர அவசரமாக பேசாமல் சென்றுவிட்டார்.
பின்னர் செய்தியாளர்கள் அனைவரும் செய்தி சேகரிக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.