• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மௌண்ட் லிட்ரா ஜீ சிபிஎஸ்இ பள்ளியில் பத்திரிக்கையாளர் தினவிழா..!

ByG.Suresh

Nov 17, 2023

சிவகங்கை, கண்டாங்கிபட்டியில் அமைந்துள்ள மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளியில் இன்று தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஊடகத்துறையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இவ்விழாவில் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நிருபர்களும், புகைப்படக்கலைஞர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

விழா மாணவர்களின் சிறப்பு அணிவகுப்போடு இனிதே தொடங்கியது. விழாவில் மாணவி.கவினோவியா வரவேற்புரை நல்கினார். ஊடகத்துறையாளர்கள் சார்பாக விழாவில் திரு.சுந்தர், தந்தி டிவி நிருபர் சிறப்புரை ஆற்றினார்.

பத்திரிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் மாணவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட நினைவுப் பரிசு வழங்குதல், சிறு நேர்காணல் மற்றும் சிறப்பு விளையாட்டுபோட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இது குறித்து பள்ளித் தலைவர் டாக்டர். பால.கார்த்திகேயன் கூறியதாவது:
மாணவர்கள் தற்போது உள்ள சூழலுக்கு ஏற்றவாறு, மாறுபடும் நாகரீக உலகில் தங்களை இணைத்துக் கொள்வதற்கும் உலகியல் உண்மைகளை அறிந்து கொள்வதற்கும் ஊடகத்துறை முக்கிய பங்காற்றுகிறது. உண்மைகளை உலகிற்கு எடுத்துரைப்பதில் மூன்றாவது கண்ணாக விளங்குகிறது எனவும் தெரிவித்தார். அதனடிப்படையில் விழாவில் ஊடகத்துறையாளர்களின் செயல்பாடுகளை கௌரவிக்கும் விதமாக உலகின் உண்மைகளை அறியச்செய்யும் மூன்றாவது கண் எனும் சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.
பத்திரிக்கையாளர்கள் தங்களின் நினைவாக மரக்கன்றுகளை பரிசாக வழங்கினர். நிறைவாக மாணவி.சுமேகா நன்றியுரை நல்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அகிலாண்டேஸ்வரி, துர்கா தேவி, சரண்யா மற்றும் சங்கர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.