• Mon. May 20th, 2024

ஜாலியோ ஜிம்கானா? – பொருள் விளக்கம்!

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் செகண்ட் சிங்கிளான ஜாலியோ ஜிம்கானா பாடலின் லிரிக்கல் வீடியோ மார்ச் 19 ம் தேதி வெளியிடப்பட்டது. அனிருத் இசையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடி உள்ளார். இந்த பாடலை கு.கார்த்திக் எழுதி உள்ளார்.

பாடலின் ஆரம்பத்தில் வரும் ஜாலியோ ஜிம்கானா என்ற வரிகள் தான் தற்போது மிகப் பெரிய ஆராய்ச்சி பொருளாக மாறியுள்ளது! ஜாலியோ என்பது மகிழச்சியாக இருப்பதாம். ஜிம்கானா என்பது வடமொழியில் உடற்பயிற்சி செய்யும் இடத்தை குறிப்பதாம். ஜிம்கானா என்ற வார்த்தைக்கு குதிரையேற்ற பயிற்சி நடைபெறும் இடம் என்ற அர்த்தமும் உள்ளதாம். கானா என்றால் வடமொழியில் சாப்பாடு என்று அர்த்தம். அதைத் தான் இதில் பயன்படுத்தி உள்ளார்களாம். ஜாலியோ ஜிம்கானா என்றால் நன்றாக சாப்பிட்டு ஜாலியாக, உடம்பு வலிமையோடு இரு என்று அர்த்தமாம்.

ராவம்மா என்றால் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஜாலி பண்ணுவதாம். ராசம்மா என்றால் கொண்டாட மூடினை குறிப்பது என அந்த பாடலை எழுதிய கார்த்திக்கே விளக்கம் அளித்துள்ளார். இது ஜாலி மோட் பாடல் என்பதால் இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *