காரியாபட்டி – மல்லாங்கிணறு பேரூராட்சிக்கு புதிய குடிநீர திட்டம் அறிவிப்பு செய்த தமிழத முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி வளர்ந்து வரும் நகரமாக இருந்து வருகிறது நாளுக்கு நாள் குடியிருப்புக்கள் அதிகமாக உருவாகுவதால் குடிநீர் தேவை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இதனால். காரியாபட்டி பேரூராட்சிக்கு கூடுதலாக குடிநீர் தேவையை குறித்து பேரூராட்சி தலைவர் செந்தில், நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்த சட்ட சபை மான்ய கோரிக்கையில் காரியாபட்டி, மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கு மக்கள் பயன்பெறும் வகையில் வைகை ஆற்றை நீர் ஆதாரமாக கொண்டு கூட்டுக்குடி நீர் திட்டம் செயல்படுத்த தமிழக அரச 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. காரியாபட்டி பகுதிக்கு குடிநீர்
திட்டத்திற்காக 80 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கும், காரியாபட்டி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். குடிநீர் திட்டம் செயல்படுத்த உறுதுணையாக இருந்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, ஒன்றிய துணை செயலாளர் குருசாமி, மாவட்ட கலை இலக்கிய பிரிவு அமைப்பாளர் வாலை. முத்துசாமி காரியாபட்டி பொதுநல அமைப்புக்கள் சார்பாத எஸ்.பி.எம். நிறுவன தலைவர் அழகர் சாமி, சுரபி நிறுவன இயக்குநர் விக்டர், ஜனசக்தி பவுண்டேஷன் தலைவர் சிவக்குமார், கிரீன் பவுண்டேஷன் நிர்வாகி பொன்ராம் உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
