ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் உலக அளவில் தங்களது விற்பனைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல சட்டச் சிக்கல்கள் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்காவில் விற்பனைக்கு வரவில்லை.
இதையடுத்து உலக அளவில் பேபி பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் டால்கம் பவுடர்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் என்று கூறி சுமார் 38,000 பேர் பல்வேறு நீதிமன்றங்களை அணுகியுள்ளனர். ஜான்சன் & ஜான்சன் மீதான புகார்களை தொடர்ந்து தேவை குறைந்து வருவதால், 2020ல் அமெரிக்கா மற்றும் கனடாவில் நிறுவனம் விற்பனையை நிறுத்தியது.
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிப்புகளை உலகளாவிய அளவில் நிறுத்துவதாக அறிவித்ததில் குற்றச்சாட்டுகளை மறுத்தது. “பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அறிவியல் சோதனைகள் டால்கம் பாதுகாப்பானது மற்றும் ரசாயணம் கலப்படம் இல்லாதது என்பதை நிரூபித்துள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 90ஸ் கிட்ஸ்களின் மிக முக்கியமாக குழந்தைகள் டால்கம் பவுடர் என்றால் இன்றளவும் நினைவுக்கு வருவது ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர்தான். அந்த வகையில், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த தயாரிப்பை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.