• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜான் ஜெபராஜ் மற்றும் அவரது உறவினர் கைது..,

BySeenu

Apr 17, 2025

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் புகார் மனு அளிப்பதற்காக வருகிறார்கள். இவர்கள் மனு கொடுப்பதற்காக காத்து இருப்பதற்கு அங்கு மரத்தடியில் திறந்தவெளி பகுதியாக இருந்தது.

இந்த நிலையில் அங்கு பொதுமக்கள் காத்து இருக்கும் போது புத்தகங்கள் , செய்தித்தாள்கள் படிப்பதற்கும், வசதியாக அமருவதற்கும் நூலகத்துடன் இருக்கைகள் வசதி தனியார் பங்களிப்புடன் கூடிய பொதுமக்கள் காத்திருப்பு வளாகம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது..

இந்த காத்து இருப்பு வளாகத்தில் 12 பெஞ்சுகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்தப் பகுதியில் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த வசதியாக வைபை வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக இலவசமாக புகார்களை அளிக்கலாம். இதை இன்று காவல் ஆணையர் சரவணன் சுந்தர் திறந்து வைத்தார். அப்பொழுது கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் பேசும்போது,

இன்று கோவை மாநகர காவல் அலுவலகத்தில், enhanced a public waiting area செட்டுடன் கூடிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளோம். மேலும் தமிழக அரசின் திட்டமான, free Wi-Fi zone-ம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஃப்ரீ வைஃபை ஜோனை பொதுமக்கள் பயன்படுத்தி, புகார்களை கொடுக்கலாம் என்று கூறியவர், கல்லூரி மாணவி தற்கொலை செய்த சம்பவத்தில் துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது, விசாரணை முடிவுற்றவுடன் தகவல் கொடுக்கப்படும் என்றார். மாணவி தற்கொலை சம்பவத்தை பொருத்த வரை, மாணவர்கள் கொடுத்த குற்றச்சாட்டு அனைத்தும் விசாரிக்கப்படும். யாரெல்லாம் புகார் கொடுத்து இருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்று கூறினார். மேலும் போதகர் ஜான் ஜெபராஜ் சார்ந்த மற்றொரு நபரை கைது செய்து இருக்கிறார்கள்,

செக்சன் 164 ல் அந்தக் குழந்தை என்ன பதில் கொடுத்து இருக்கிறது, அதைப் பொறுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. பென்னெட் மீது அந்த குழந்தை புகார் தெரிவித்து இருக்கிறது, அதன் பிறகு தான் அவரை கைது செய்து இருக்கிறோம். வேறு யார் மீதும் இதுவரை அந்த குழந்தை புகார் கூறவில்லை என்று கூறினார். வைஃபை எல்லாம் தகவல் திருட்டு என்ற பாதுகாப்பு இன்மை இருப்பதாக கூறுகிறார்களே, இதில் எவ்வளவு பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்விக்கு,

இது அரசினுடைய வளர்ச்சி திட்டம். நம்பிக்கையாக பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்று கூறினார். தொடர்ந்து பேசியவர், கோவையில் பாதுகாப்பிற்காக நிறைய பேப்ரோல்கள் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன என்று கூறினார். சமூக வலைதள ரீல்ஸ் மோகத்தால் காவல் நிலையங்களில் முன்பே வீடியோக்கள் எடுக்கிறார்களே என்ற கேள்விக்கு,

பொதுமக்கள், இளைஞர்கள் சமூகத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை உணர்ந்து செய்ய வேண்டும். ஏற்கனவே இது சம்பந்தமாக வந்த புகார்களின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டு இருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தர் தெரிவித்து உள்ளார்.