• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் வீட்டின் மேற்கூரை வழியாக இறங்கி நகை கொள்ளை..!

ByKalamegam Viswanathan

Feb 24, 2023

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள வீட்டின் மேற்கூரை வழியாக இறங்கி 30 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க சென்றிருந்த நிலையில், வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் மேற்கூரையை உடைத்து, அதன் வழியாக வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சுப்ரமணியபுரம் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.