• Sun. Jun 23rd, 2024

ஜெனகை மாரியம்மன் ஆலய திருவிழா

ByN.Ravi

Jun 15, 2024

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது .
மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா கடந்த பத்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன் ஐந்தாம் நாளான நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்து பொது
மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது இதில், அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், கோட்ட மேலாளர் மேற்கு முத்துராஜ், கோட்ட மேலாளர் கிழக்கு தாயாள
கிருஷ்ணன், கோட்ட மேலாளர் வணிகத்துறை நடராஜன்,கோட்ட மேலாளர் தொழில்நுட்பம் முருகானந்தம், கார்ப்பரேட் உதவி மேலாளர் யுவராஜ், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன்,
பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், தொழிலதிபர் அரிமா சங்கத் தலைவர் டாக்டர் மருது பாண்டியன், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன்,செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் தனபாலன், துணைத் தலைவர் சேவியர், துணைச் செயலாளர் பாலமுருகன், பொதுக்குழு தங்கராஜ், கண்ணன் ,ஹபீப் முகமது, மருத வீரன், செந்தில், அண்ணா தொழிற்சங்க தலைவர் சின்னன், செயலாளர் பாண்டி, பொருளாளர் ராமச்சந்திரன், சிஐடியு மத்திய சென்னை நிர்வாகி ராஜ்குமார், செயலாளர் முனியசாமி,
ஐ என் டி யு சி செயலாளர் தங்கமணி, எஸ்சி எஸ்டி நிர்வாகிகள் மற்றும் சோழவந்தான் கிளை நிர்வாகிகள் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed