நீலகிரி மாவட்டம் உதகை அருகே கேத்தி பாலாடா பகுதியில் கேரட் அறுவடை செய்யும் தொழிலாளர்கள் சென்ற பிக்கப் ஜீப் கட்டுபாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வடமாநில பெண் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி காயமடைந்தவர்களை கேத்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் கேரட் அறுவடை செய்ய தடை உள்ளது. ஆனால் அதனையும் மீறி நள்ளிரவு நேரத்தில் கேரட் அறுவடையில் தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் தூக்கமின்மையோடு தொழிலாளர் வாழ்ந்து வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் செல்வதால் விபத்துக்குள்ளாகியும் வருகின்றனர்.
இந்த நிலையில் உதகை அருகே நள்ளிரவு நேரத்தில் கேரட் அறுவடை செய்து பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அழைத்து சென்ற பிக்கப் ஜீப் வாகனம் கேத்தி பாலாடா பகுதியில் கட்டுபாட்டினை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணித்த தஷ்மி என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்களை உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்துள்ளனர். இது குறித்து லவ்டேல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.