• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு..!

Byவிஷா

Dec 5, 2023

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, அதிமுக சார்பில் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
விருதுநகரில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தொகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விருதுநகர் தேசபந்து மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் விஜயகுமரன் தலைமையில் அதிமுகவினர் அம்மா அவர்களின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கலாநிதி ஒன்றிய கழகச் செயலாளர்கள் தர்மலிங்கம் கண்ணன் மச்ச ராஜா, நகரக் கழகச் செயலாளர் முகமது நையினார், நகரக் கழக துணைச் செயலாளர் பா. கண்ணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.