• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா புகைப்படம் அகற்றம்..முன்னாள் அமைச்சர் கொந்தளிப்பு

Byகாயத்ரி

Mar 14, 2022

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் உணவருந்தும் அடிப்படையில் சென்னையில் அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழகம் முழுவதும் நகரப் பகுதிகளில் அம்மா உணவகம் திறந்து வைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

இந்த நிலையில் சட்டப்பேரவைத் தோ்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மதுரையில் செயல்பட்டு வந்த அம்மா உணவகங்களிலிருந்த ஜெயலலிதாவின் படங்கள் அகற்றப்பட்டது. இது தொடர்பாக சா்ச்சை எழுந்த நிலையில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்ததைத் தொடா்ந்து மீண்டும் ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டது.இந்நிலையில் மதுரை மாநகாரட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள 12 அம்மா உணவகங்களிலும் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உள்பட எந்த அரசியல் கட்சித் தலைவா்களின் படங்களும் இன்றி “அம்மா உணவகம்” என்ற பெயரில் தமிழக அரசு முத்திரை மற்றும் மாநகராட்சி முத்திரை பதிக்கப்பட்ட புதிய பெயா் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.