• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆஸ்கார் யூடியூப் தளத்தில் ‘ஜெய் பீம்’!

இயக்குனர் ஞானவேல்  இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்  ஜெய்பீம். ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மக்களுக்காக வாதாடக் கூடிய வழக்கறிஞராக நடிகர் சூர்யா நடித்துள்ள இப்படம், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களில் முதல் இடத்திலும், ஐஎம்டிபி இணையதளத்தில் அதிக புள்ளிகளை பெற்று உலக அளவில் முதலிடத்தையும் பிடித்து ஏற்கனவே சாதனை புரிந்துள்ளது ஜெய் பீம். இந்நிலையில், தற்போதும் ஆஸ்கார் யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் படத்தில் உள்ள 12 நிமிட காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆஸ்கார் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் ஜெய்பீம் தான் என்பது குறிப்பிடத்தக்கது..