ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் முதல்வராக வேண்டி, ஜனசேனா கட்சி தொண்டர்கள் திருப்பரங்குன்றத்தில் வேண்டுதல் செய்தனர்.
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று வருகை தந்துள்ளார். அவருடன் திருப்பதி சட்டமன்ற உறுப்பினரான ஜனசேனா கட்சி எம்எல்ஏ ஆரணி சீனிவாசலூவும் வந்துள்ளார். இந்நிலையில் மதுரை வந்த ஜனசேனா கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ சீனிவாசலு ஆதரவாளர்கள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்து விட்டு, செய்தியாளர்களை சந்தித்தபோது..,
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மதுரை முருகன் மாநாட்டிற்கு வந்துள்ளார். அவருடன் வந்த தங்கள் கட்சி எம்எல்ஏ சீனிவாசன் உடன் ஆந்திராவில் இருந்து 150 பேர்மதுரை வந்துள்ளதாகவும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ததாகவும், தற்போது ஆந்திராவில் துணை முதல்வராக உள்ள பவன் கல்யாண் விரைவில் முதல்வராக வேண்டுமென ஜனசேனா கட்சி சித்தூர் மாவட்ட தலைவரும், நகர்ப்புற கைத்தொழில், வளர்ச்சித்துறை சேர்மன் ஹரிபிரசாத்துடன் தொண்டர்கள் அனைவரும் வேண்டுதல் வைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
