• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முதல் முறையாக சென்னை அருகே ஜல்லிக்கட்டு..

ByA.Tamilselvan

Jan 11, 2023

முதல் முறையாக, மார்ச் 5-ம் தேதி தலைநகர் சென்னை அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. இதில் 501 காளைகளும், சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகிறார்கள்.
தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் பேசும்போது..; “முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் முதல் முறையாக சென்னையை அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதி மக்களின் நீண்ட கால ஏக்கம் தீரும் வகையில் நடத்த உள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்வர் பெயரில் ஒரு காளை உட்பட சிறந்த 501 காளைகள் கலந்துகொள்ள உள்ளன.
தமிழகத்திலேயே சிறந்த மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகிறார்கள். மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. போட்டியில் முதல் இடம் பெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், மாடுபிடி வீரருக்கு இருசக்கர வாகனமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஜல்லி்க்கட்டை 10 ஆயிரம் பேர் பார்க்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே இதற்கான பணிகள் தொடங்கி விட்டது. இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும்” என்று கூறினார்.