• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

ஜல்லிக்கட்டு விழா திமுகவின் குடும்ப விழாவாக மாறிவிட்டது..,முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடும் தாக்கு..!

ByKalamegam Viswanathan

Jan 19, 2024

கோவையில் திமுக ஆட்சியில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை போல தற்போது ஜல்லிக்கட்டு விழா குடும்ப விழாவாக நடைபெற்றது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
கழக அம்மா பேரவையின் சார்பில் பழனியில் செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் அம்மா கிச்சன் மூலம் அன்னதானத்தை வழங்கி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
திமுக அரசு பொய்யிலே பிறந்து பொய்யிலே நாட்களை நகர்த்தி வருகிறது. திமுக மீது மக்கள் கடுமையாக கோபம் அடைந்து வருகிறார்கள். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது தொகுதி வாரியாக மக்களின் மனுக்களை பெற்று ஒரு பெட்டியில் பூட்டி அதன் சாவி என்னிடம் உள்ளது இந்த மனுக்களுக்கு நான் ஆட்சிக்கு வந்தவுடன் தீர்வு காண்பேன் என்று கூறினார்.இதுகுறித்து எடப்பாடியார் அந்த மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டதா? என்று கேட்டதற்கு இதுவரை முதலமைச்சர் பதில் கூறவில்லை.
மக்களை தேடி அரசு என்ற திட்டத்தின் மூலம் அம்மாவின் அரசு 60 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் குறைதீர்க்கும் முகாம் என்ற திட்டத்தின் மூலம் 10 லட்சம் மனுக்களுக்கு ஒரே நேரத்தில் எடப்பாடியார் தீர்வு கண்டார். முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அதில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும், மாதம்தோறும் கிராமங்களில் தங்கி மக்களின் குறைகளை தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என அறிவித்தார் .இது களத்தில் முதலமைச்சர் அடுத்த கட்ட திட்டம் என்று கூறினார் இதுவரை மக்களின் குறைகளை தீர்க்கப்பட்டுள்ளதா?
ஜல்லிக்கட்டு போட்டி என்பது 1,500 ஆண்டுக்கு முன்பு வந்தது ஆனால் ஜல்லிக்கட்டு போட்டியை தான் கண்டுபிடித்தது போல அமைச்சர் மூர்த்தி தோற்றத்தை உருவாக்கி வருகிறார் இது மிகவும் நகைச்சுவையாக உள்ளது. ஜல்லிக்கட்டு உரிமை யார் ஆட்சியில் நிறுத்தப்பட்டது என்று மக்களுக்கு நன்றாக தெரியும். ஜல்லிக்கட்டை மீண்டும் மீட்டுக் கொடுத்து அதை நேரடியாக வந்து பச்சைக் கொடி அசைத்து எடப்பாடியார் தொடங்கி வைத்தார் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதன் கல்வெட்டை கூட மறைத்தார்கள் மக்கள் எதிர்ப்புக்குபிறகு மீண்டும் வைக்கப்பட்டது.அமைச்சர் மூர்த்தி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது எத்தனை முறை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியுள்ளார்.
அவனியாபுரம், அலங்காநல்லூர் பாலமேடு ஆகிய ஜல்லிக்கட்டு போட்டியில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது மதுரை சேர்ந்த 10 தொகுதிகளில் அதிக அளவில் பங்கேற்ற காளைகள் எந்த தொகுதி என்று மக்களுக்கு நன்றாக தெரியும். ஆன்லைன் என்று கண்துடைப்பு நாடகத்தை நடத்திவிட்டு அதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. தற்போது கூட வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கியதில் கூட தற்போது குழப்பத்தில் உள்ளது.
தற்போது 24ம் தேதி ஜல்லிக்கட்டு மைதானத்தை திறக்கப் போகிறோம் அதில் ஐந்து நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று கூறுகிறார்கள். ஜல்லிக்கட்டு விளையாட்டை பொம்மை விளையாட்டாக ஆக்க முயற்சிக்க கூடாது.இந்த போட்டியை மக்கள் விளையாட்டாக நடத்த வேண்டும். ஏற்கனவே கோவையில் திமுக ஆட்சியில் செம்மொழி மாநாட்டை குடும்ப விழாவாக நடத்தியதுபோன்று தற்போது ஜல்லிக்கட்டையும் குடும்ப விழாவாக நடத்தி வருகிறார்கள் மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் அப்போது ஜல்லிக்கட்டு போட்டி மக்கள் விழாவாக நடக்கும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே. தமிழரசன், எம்.பி.கருப்பையா, கே. மாணிக்கம், எஸ்.எஸ் சரவணன், மாநில அம்மா பேரவைதுணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர்கள் காளிதாஸ், அரியூர் ராதாகிருஷ்ணன், கொரியர் கணேசன் மற்றும் ராஜேஷ் கண்ணா உட்பட பலர் இருந்தனர்.